Pages

Popular Posts

Thursday, 10 November 2011

எனக்கா பைத்தியம் போடா புத்தி கெட்ட மனிதா ......!

எனக்கா பைத்தியம் போடா புத்தி கெட்ட மனிதா

இந்த உலகத்தில் உலவுது பணப் பைத்தியம்
சொத்து பைத்தியம்

சோறு கண்ட இடமே சொர்க்கம் என்று
நீ உழைக்காமல் இருந்தால் சோம்பேறி பைத்தியம்

பெண் மேல் ஆணும் ஆண் மேல் பெண்ணும் கொள்ளும்
கொடூர வெறி மனம் படைத்த காம பைத்தியம்

அடுத்தவர் மனதை தேள் போல்
கொட்டும் கோப பைத்தியம்

அடுத்தவர்களின் நம்பிக்கையை ஏமாற்றி
அதில் குளிர் காயும் நீயே ஒரு பைத்தியம்

எதிர்பார்ப்பு வளர்த்தால் நீயும் ஒரு பைத்தியம்

ஏமாந்துபோய் தலையில் துண்டை போட்டு
கொண்டால் நீயும் பைத்தியம்

சூது, குதிரை பந்தயத்துக்கு அடிமையாகும்
கோழை பைத்தியம்

பணக்காரன் ஆக வேண்டும் என்று எண்ணி
இருப்பதை கோட்டை விடும் நீயும் பைத்தியம்

புகை பழக்கம் குடி பழக்கத்துக்கு அடிமை ஆகும்
நீ ஒரு கேவல புத்தி படைத்த பைத்தியம்

அனைவரயும் தப்பான பார்வை பார்க்கும்
அசிங்கமான மனித பைத்தியம்

எந்தவொரு விஷயத்துக்கு
அடிமை ஆகும் நீயும் பைத்தியம்

அதற்கு செய் நீ முதலில் ஒரு வைத்தியம்
நீ தெளிந்தால் என்னை சொல் பைத்தியம் என்று

இதுவும் நடக்காத சிரிப்பு கூத்து தான்
யாருக்கு பைத்தியமோ எனக்கு வியப்பு தான்
என்ன வைத்தியமோ அதும் ஒரு வித தவிப்பு தான்

No comments:

Post a Comment